சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ கோரக்க சித்தர் திருக்கோவிலில் கோரக்க சித்தர் சிறப்பு யாக பூஜை
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ கோரக்க சித்தர் திருக்கோவிலில் கோரக்க சித்தர் சிறப்பு யாக பூஜை
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ கோரக்க சித்தர் திருக்கோவிலில் கோரக்க சித்தர் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோரக்க சித்தர் திருக்கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மகா யாக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக சித்தர் சன்னதியில் ஸ்ரீ கோரக்க சித்தரின் திருவுருவ படத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து சுதை சிற்பமாக ஸ்ரீ பாலாம்பிகை அம்மன் ஸ்ரீ நடராஜர் சுவாமி ஸ்ரீ சிவகாமி அம்மன் மற்றும் கோரக்க சித்தரை எழுந்தருள செய்தனர் தொடர்ந்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது பின்னர் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று யாகத்தில் 108 மூலிகை பொருட்கள் பட்டுச்சேலை பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர்.
நிறைவாக பூர்ணகுதி அளித்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் கைலாய வாத்தியம் உடன் கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்படிகலிங்கம் விநாயகப் பெருமானுக்கும் கால சக்கத்திற்கும் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோரக்க சித்தரை வழிபாடு செய்தனர்.