42 வயதில் சாதனை புரிந்த Siva கார்த்திகேயனின் அக்கா
அமரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் 320 கோடியை தாண்டி இன்னமும் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இவரின் அக்கா குறித்த பதிவை நெகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இவர் பிரபல நடிகராக இருந்தாலும் தனது குடும்பத்திற்காக நேரம் ஒருக்குவதை தவற மாட்டார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது சகோதரியின் பிறந்தநாளுக்கு. புத்தம் புதிய, ஆடம்பரமான சொகுசு காரை பரிசளித்திருக்கிறார்.
குழந்தை பிறந்தவுடன் எம்பிபிஎஸ் முடித்து, 42 வயதாகும் அவரது அக்கா தங்கப் பதக்கத்துடன் எம்டி பட்டம் பெற்று, எஃப்ஆர்சிபியை எட்டியது உள்ளிட்ட மருத்துவத் துறையில் அவர் செய்த சாதனைகளைப் பாராட்டினார் சிவகார்த்திகேயன் .
அவர் படிப்பிற்கு உதவியாக இருந்த தனது அத்தானுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அத்தான் அக்காவை படிக்க ஊக்குவித்தார் ஆனால் எனது மனைவி என்னை நடிக்க ஊக்குவித்ததாகவும் கூறினார்.
அப்பா இருந்தால் இப்போது மகிழ்ச்சியாக இருந்திருப்பார். உனக்கு எப்பொழுதும் அத்தான் உறுதுணையாக இருக்கிறார் அவருக்கு நன்றி என்று பதிந்துள்ளார்.