சிவகங்கை – சோழபுரம் ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ உலக சுந்தரி அம்மன் திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உலக சுந்தரி அம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மிகப் பழமையான இத்திருக்கோவிலை புணரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
கோவில் அருகே யாகசாலை அமைத்து இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடந்தன யாக ஹோமத்தில் 108 மூலிகை பொருட்கள் பூர்ணா குதி சமர்ப்பித்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ உலக சுந்தரி அம்மனை வழிபட்டனர்.