சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண வைபவம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் வருடபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது முன்னதாக கோவில் வளாகத்தில் உற்சவ தெய்வங்களை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சமர்ப்பித்தவுடன் மாலை மாற்று வைபவம் கன்னிகாதானம் புனல் அணிவித்தல் பட்டு வஸ்திரம் சாற்றுதல் வைபவங்கள் நடைபெற்றன.
பின்னர் யாக பூஜைகள் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி தேவியர்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து வாரணம் ஆயிரம் பூஜைகளும் மகா கற்பூர ஆராதனையும் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர்.