சிவகார்த்திகேயன் மற்றும் கமலஹாசனை குண்டர் சட்டத்தில் கைதி செய்ய வேண்டும்
கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘அமரன்’ படத்தின் டைட்டில் டீசர் சென்ற வாரம் வெளியானது.
படத்தின் டீசரை பார்த்த சிலர் வலைத்தளத்தில் இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் படம் என்று பல மீம்சுகள் போடப்பட்டது.
அதனை பார்த்து வேகுகொண்டு எழுந்து திருச்சியில் உள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சிவகார்த்திகேயன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் மற்றும் கமலஹாசன் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.
பல வருடங்களுக்கு முன்பாக வெளியான கமலஹாசனின் விஸ்வரூப படத்திற்கும் தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் வெடித்தன, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக அப்படத்தில் காட்டி இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பல இயக்குனர்கள் பல வருடங்களாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சனையை மையமாக வைத்து தான் படம் இயக்கி வருகிறார்கள். ஆனால் அமரன் படத்திற்கு மட்டும் ஏன் இவ்வாறு சர்ச்சையை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
அமரன் படம் மறைந்த ராணுவ வீர மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தான் உருவாகிறது என்பது உருவாகியுள்ளது.
இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக எந்த காட்சி வைக்கப்பட்டது என்பது தான் தெரியவில்லை Election …னை முன்னிட்டு கமலஹாசனுக்கு வைக்கப்பட்ட வெடி என்று மட்டும் தெரிகிறது.