in

சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் கேட் மூடல்

சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் கேட் மூடல் மாற்றுப்பாதையால் கடும் போக்குவரத்து நெரிசல்

மேம்பால பணிகளுக்காக சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் கேட் தற்காலிகமாக மூடப்பட்டு சோதனை முறையில் இன்று மற்றும் நாளை மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிவகாசி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க கடந்த ஜனவரி 26ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு  ரூ.64 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதையடுத்து தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது. விரைவில் மேம்பால கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுப் பாதை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மேம்பால பணி தொடங்குவதற்கு முன்பாக ரயில்வே கிராசிங் மூடப்பட்டு தற்காலிகமாக சோதனை முறையில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்றும் நாளையும் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை முதல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. சிவகாசி நகருக்குள் வாகனங்கள் செல்வதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

What do you think?

மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் வண்டியை கடலூர் வரை நீடித்து இயக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம்