SK 23 Title Released …?
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘எஸ்கே 23’ Sivakarthikeyan பிறந்த நாளான பிப்ரவரி 17 அன்று படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கபட்டது.
இப்படத்தின் ஷூட்டிங் பல மாதங்கலை கடந்து விட்ட நிலையில், டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் மற்றும் கிருத்தி சனோன் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK 23 படத்தின் டைட்டில் காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மதராசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 40 – வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதா கொங்கரா அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாவீரன்!!! @சிவகார்த்திகேயன் எங்கள் உடன் பணிபுரிவதில் நீங்கள் முழு மகிழ்ச்சி அடைகிறீர்கள்.. என்று சுதா கொங்காரா பதிவிட்டுள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகர்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார்.