சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் மறைவு
சின்னத்திரை நடிகர் திடீரென்று மரணம். ஜெயா டிவி..யில் ஒளிபரப்பட்ட சஹானா தொடர் முலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீதர், குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் கலக்கியவர்.
அண்மையில் விஜய் டிவியில் செல்லம்மா தொடரில் நடித்த ஸ்ரீதர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபாகி வரும் வள்ளியின் வேலன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
62 வயதாகும் இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மின் செய்யப்பட்டவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.