புதுவையில் இருந்து இரண்டு சொகுசு கார்களில் மது பாட்டில் கடத்தல்
புதுவையில் இருந்து இரண்டு சொகுசு கார்களில் விலை உயர்ந்த மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதை அடுத்து மத்திய நுண்ணறிவு மண்டல ஆய்வாளர் சின்னகாமணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன் மற்றும் இனாயத் பாட்ஷா மற்றும் போலீசார் வானூர் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அதிவேகமாக வந்து இரண்டு சொகுசு காரை மடக்கிய போது அதிலிருந்து ஒருவர் தப்பிய நிலையில் மற்றொரு நபரை பிடித்து விசாரணை நடத்தி அதிநவீன சொகுசு காரை சோதனை செய்ததில் புதுவையில் இருந்து உயர்ரக மதுபானம் சுமார் 1500 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது இதையடுத்து புதுவையைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்களையும் மத்திய நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர் கைப்பற்றிய மதுபானங்கள் மற்றும் சொகுசு காரர்களின் மொத்த மதிப்பு 50 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு மத்திய நுண்ணறிவு போலீசார் பாலமுருகனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மது பாட்டில்களை ஒப்படைத்தனர்.
இதுகுறித்துகோட்டகுப்பம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய நுண்ணறிவு போலீசார் தெரிவிக்கையில் இது போன்ற அந்நிய நாட்டு மதுபானங்கள், போலி மதுபானம்,மற்றும் கஞ்சா தொழில் செய்யும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் தானாக முன்வந்து கட்டணம் இல்லா தொலைபேசி எண் 9498410581 க்கு புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் புகார் தருவோர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.