in

விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தல்

விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தல்

 

இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தல் மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசாரணை.

இலங்கையிலிருந்து நேற்று மதியம் மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை பரிசோதனை செய்தனர்.

அப்போது ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8, என மொத்தம் 64 வன உயினங்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சுங்க இலக்கா பிரிவினர் வேலூர் பயணியிடம் விசாரித்த போது இலங்கையில் இருந்து புறப்படும் போது ஒரு நபர் என்னிடம் இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும் அதை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் விசாரணையை தொடர்ந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை நீதி மன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

What do you think?

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

திண்டிவனம் ஈஸ்வரன் கோயில் ரோடு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்