in

வரலாற்று சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை பசுமை துறைமுகமாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை பசுமை துறைமுகமாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

வரலாற்று சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை கப்பல் போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துறைமுகத்தின் பிரதான வசதிகள் மேம்பாடு எதுவும் செய்யப்படாத காரணத்தால் பயணிகள் அசௌகரியத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 ஆம் ஆண்டு 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் பசுமை துறைமுகம் உருவாக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால் தொன்மை வாய்ந்த நாகை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் விவசாயமும் பொய்த்து போனதால் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, வரலாற்று சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை பசுமை துறைமுகமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

What do you think?

ராஷ்மிகா மந்தனாவை காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கடுமையாக விமர்சித்துள்ளார்

திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மக பிரமோற்சவம்