திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரரின் தந்தை தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் மாவட்டம், காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த செபஸ்தியார். இவரது மகன் அருண் வென்னிஸ் ஹரியானா மாநிலத்தில் ராணுவ வீரராக 6 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
செபஸ்தியருக்கு சொந்தமாக அப்பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தின் அருகே செபஸ்தியாரின் அண்ணன், தம்பிகளான அருளானந்தம், பீட்டர் அந்தோணி ஆகியோருக்கும் பங்கு உள்ளது.
முறைப்படி சொத்துக்கள் அனைத்தும் மூன்று நபர்களுக்கும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரிக்கப்பட்ட செபஸ்தியர் இடத்திற்கு செல்லும் பாதையை அவரது உடன்பிறந்த சகோதரர்கள் இருவரும் ஆக்கிரமித்து வைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக செபஸ்தியார் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் பல வருடங்களாக மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட செபஸ்தியர் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தவர்.
தனது உடன் பிறந்த சகோதரர்கள் தனது நிலத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் அதனால் தனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என கூறி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார்.
இதனை தடுத்து நிறுத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.