in

சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் ஜார்க்கண்ட் மகாராஷ்ட்ரா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது , இந்தியா கூட்டணி சமுத்திரம் போன்றவை அலைகள் இருக்கத்தான் செய்யும் தேர்தல் நேரத்தில் அலைகள் ஓய்ந்து அமைதி ஏற்படும். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் ஜார்க்கண்ட் மகாராஷ்ட்ரா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்காவில் நடந்து வரும் பல்வேறு பணிகளை சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு செய்தது தொடர்ந்து நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நாங்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு நடத்தியது நாங்குநேரி பகுதியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்கா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதில் ஒரு வழக்கு வெற்றி பெற்ற நிலையில் எம் சி எல் டி நிறுவனத்திடம் இருந்து 590 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது மேலும் 1800 ஏக்கர் நிலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் தொழில்நுட்ப பூங்கா செயல்பாட்டிற்கு வரும் அதனைத் தொடர்ந்து தென்பகுதி மக்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

காங்கிரஸ் நெல்லை மாவட்டம் முன்னாள் தலைவர் கே பி கே ஜெயக்குமார் கொலை வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணை தீவிர படுத்த வேண்டும் என குற்றப்புலனாய்வுத்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது தொழில்நுட்ப ரீதியான விசாரணையும் அறிவியல் பூர்வமான விசாரணையும் நடந்து வருகிறது அமைச்சர் கே என் நேரு சகோதரர் கொலை வழக்கை போன்றே கே பி கே ஜெயக்குமார் வழக்கு உள்ளது சிபிஐ விசாரித்த நிலையில் கே என் நேரு சகோதரர் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் திணறியது ஆனால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கை சி பி சி ஐ டி விசாரணை தீவிர படுத்திய நிலையில் வழக்கில் தொடர்புடைய இரண்டு மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக ஐஜி தெரிவித்துள்ளார் விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் கேபிஜே ஜெயக்குமார் வழக்கு கொலை வழக்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரையும் குற்றவாளி என சொல்லிவிட முடியாது விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார்

இந்தியா கூட்டணியில் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என சிலர் செயல்பட்டு கருத்துக்களை தெரிவிக்கின்றனர் கூட்டணி வலுவாக உள்ளது. இந்தியா கூட்டணியை சமுத்திரம் போன்றவை அலைகள் இருக்கத்தான் செய்யும் தேர்தல் நேரத்தில் அலைகள் ஓய்ந்து அமைதி ஏற்படும். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. வயநாட்டு தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியை பெருவார் ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி எங்களுக்கு உறுதியாகி உள்ளது என தெரிவித்தார். பேட்டியின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

What do you think?

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆறு மாதத்திற்கு செயல்பாட்டிற்கு வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை வீதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான ஆய்வு