‘ஃபதே’ படத்தின் வசூலை …லை முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறார்.. சோனு
பிரபல ஹிந்தி நடிகர் சோனு தமிழில் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தார். ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கிய வருகிறார்.
சோனு தற்பொழுது ஃபதே (Fateh) என்ற படத்தை டைரக்ட் செய்ய அவரது மனைவி சோனாலி தயாரித்துள்ளார்.
அடுத்த மாதம் திரைக்கு வரும் இப்பட நிகழ்ச்சியின் பிரமோஷ..னில் சோனு சூட் …ஃபதே…வின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். ஃபதே சைபர் கிரைமை அடிப்படையாகக் கொண்டு எடுக்க பட்டது.
மக்கள் ஒவ்வொரு நாளும் இணைய மோசடியை எதிர்கொள்கின்றனர். சைபர் கிரைமில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தும்... ஃபதே.. சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட, படத்தின் வசூலை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறி Applause..சை அள்ளினார்.