in

விரைவில் முதல்வரின் கவணத்திற்க்கு கொண்டு சென்று பாலம் விரிவாக்கம் செய்யப்படும்.. நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பேட்டி….

தஞ்சையில் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக திட்டமிடாமல் கட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் சாந்தப்பிள்ளை கேட் பாலத்தை , விரிவாக்கம் செய்வது குறித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மேயர் உள்ளிட்டவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை .. விரைவில் முதல்வரின் கவணத்திற்க்கு கொண்டு சென்று பாலம் விரிவாக்கம் செய்யப்படும்.. நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பேட்டி….

கடந்த அதிமுக ஆட்சியில் தஞ்சை சாந்த பிள்ளை கேட் இரயில்வே மேம்பாலம் முறையாக திட்டமிடாமலும், பல்வேறு பகுதி மக்கள் போக்கு வரத்திற்க்கு பெரும் இடையூராகவும் இருக்கும் வகையில் கட்டப்பட்ட நிலையில் ,அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்… அதனை தொடர்ந்து, மழை காலம் வரவுள்ள நிலையில், மேரீஸ் கார்னர் பகுதி கீழ்பாலம் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்தும், தஞ்சை பெரிய கோயில் முன்பாக நீடிக்கும் போக்கு வரத்து இடையூரை தீர்க்கும் வகையில் அமைய உள்ள திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி….

கடந்த திமுக ஆட்சியில் சாந்த பிள்ளை கேட் மேம்பாலம் அமைவதற்க்கு திட்டம் வகுத்து நிலையில், ஆட்சி மாற்றத்திற்க்கு பிறகு திட்டத்தை மாற்றி , முறையாக மேம்பாலம் கட்டப்படாததால், பொது மக்கள் அவதியுறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர், இதனை கருத்தில் கொண்டு இப் பாலத்தை இராமநாதன் ரவுண்டானா வரை நீடித்து அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம், விரைவில் முதலமைச்சரின் கவணத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்றார்…

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் அளித்த பேட்டியில்…

இப்பாலம் விரிவாக்கம் செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதால் நிச்சயம் விரைவில் விரிவாக்கப்பணிகள் நடைபெறும் என்றார்

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (10.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பிரதான சாலையில் இருகார்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து