செய்யாத தப்புக்கு மன்னிப்பா…. கண்டனம் தெரிவித்த பிரகாஷ்ராஜ்
ஹைதராபாத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி கார்த்திடம் லட்டு பற்றி கேள்வி கேட்டபோது அவர் அளித்த பதிலுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் அவர்கள் கண்டனம் தெரிவித்ததால் நடிகர் கார்த்தியும் மன்னிப்பு கேட்டார்.
எந்த சம்பவம் குறித்து தனது வலைதளத்தில் பிரகாஷ்ராஜ் கோபமாக போஸ்ட் செய்திருக்கிறார்.
செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பதில் என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை பவன் கல்யானுக்கு.. என்று கேள்வி கேட்க உணர்வு பூர்வமான விஷயங்களில் பிரகாஷ்ராஜ் கவனம் செலுத்த வேண்டும் தானதர்மம் குறித்து தவறாக பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
இதற்கு மீண்டும் பதில் கொடுத்த பிரகாஷ் ராஜ் நான் சொன்னதை பவான் தவறாக புரிந்துள்ளார். நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இந்தியா வந்ததும் பவன் கல்யாண் கேள்விக்கு பதில் சொல்கிறேன் முடிந்தால் அதற்குள் நான் சொன்னதை மீண்டும் படித்து நன்கு புரிந்து கொள்ளடும் என்றார்.