in

சிதம்பரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

சிதம்பரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

 

சிதம்பரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய முகப்பு கட்டிடம், நுழைவு வாயில், நடைமேடை, மற்றும் அறிவிப்பு பலகை போன்ற பல்வேறு பணிகள் இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக தனி ஆய்வு ரயிலில் வந்த அவர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் புதிதாக புனரமைக்கப்பட்டு வரும் டிக்கெட் மற்றும் முன்பதிவு அறை, நடைமேடை, ரயில் நிலையம் முகப்பு கட்டிடம் உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகள் நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சிதம்பரம் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார், சிதம்பரம் ரயில் நிலையத்தில் இயங்கி வரும் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முதலாவது நடைமேடைக்கு மாற்ற இடம் ஒதுக்கி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுபோல் சிதம்பரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூர் வரை நீட்டித்ததற்கு நன்றி தெரிவித்து பாராட்டு மற்றும் வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. மேலும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

இதுபோல் பரங்கிப்பேட்டை பயணியர் நலச் சங்கத்தின் சார்பில் நிர்வாகி அருள்முருகன் ரயில்வே பொது மேலாளரிடம், பரங்கிப்பேட்டையில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மனு அளித்தார்.

What do you think?

போடியில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு