எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை…கௌரவித்த, முதலமைச்சர் மு க ஸ்டாலின்
அவர் தேகம் மறைந்தாலும் இன்றும் குரலால் வாழ்ந்து கொண்டிருப்பவர் SPB.
மறைந்த பாடகர் SP பாலசுப்ரமணியன் அவர்களை கௌரவிக்கும் விதமாக நுங்கம்பாக்கத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் 40க்கும் மேற்படி திரைப்பட பாடல்களை பாடி பல விருதுகளை பெற்றவர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு 2020ஆம் ஆண்டு மறைந்தார்.
அவரது நினைவு தினம் நேற்று செப்டம்பர் 25…அன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சென்னையில் அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை ...என இனி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
X தளத்தில் போஸ்ட் வெளியிட்ட அவரது மகன் SP சரண் நான் எங்கள் குடியிருப்பு சம்மத பட்ட அதிகாரிகளிடம் அப்பாவின் பெயர் வைக்க வேண்டும் மனு கொடுத்தோம் ஆனால் முதல்வரிடம் மட்டும் மனு கொடுக்க வில்லை.
இதனை எப்படியோ அறிந்த முதல்வர் அவர்கள் 36 மணி நேரத்திற்குள் அப்பாவின் பெயர் சாலை…இக்கு வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறபித்தார், முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.