புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்,விவசாய நிலங்களில் வேலை செய்வதற்கான திட்டத்தை முதலமைச்சர் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பார்..சபாநாயகர் செல்வம் உறுதி.
புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் சார்பாக தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கரியமாணிக்கம் ஹோலி ப்ளவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நெல் திருவிழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.பின்னர் இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, வேளாண்துறை இயக்குனர் மற்றும் நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்க நிர்வாகிகள் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை தலைவர்… விவசாயிகள் விளைநிலங்களில் உற்பத்தி செய்கின்ற செலவைவிட விற்பனை செய்கின்ற பொருட்களுக்கு விலை குறைவாகவே உள்ளது. இதனால் மக்களுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்… இதனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கத் தொகையை கொடுத்து வருகிறார்.. தற்போது புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள். விவசாய விலை நிலங்களில் செயல்படுத்தினால் விவசாயிகளின் செலவு குறையும் என்பதற்காக வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சரங்கசாமி திட்டத்தை நடைமுறைப்படுத்த தெரிவிப்பார் என கூறினார்…