சிவகங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை
சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எதிரே அமைந்துள்ள அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மூலவர் சித்தி விநாயகருக்கு மஞ்சள், திருமஞ்சன பொடி, மாவு கரைசல், பால், தயிர், பழங்கள், தேன், நெய், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமனை திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சுவாமிக்கு அருகம்புல் மாலை வண்ண மலர் மாளிகையில் கொண்டு சர்வ அலங்காரம் நடைபெற்றன.
பின்னர் விநாயகப் பெருமானுக்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் நடைபெற்றன நிறைவாக தேங்காய் தீபம் ஏற்றி மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.