in

கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை நவகிரக கோவில்களில் பிரதானமான சூரியனார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நவகிரக கோவில்களில் பிரதானமான சூரியனார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விடுமுறை நாளை ஒட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதல் வழிபாடு.

நவகிரக கோவில்களில் பிரதானமாகவும் சூரியன் பரிகாரத்தலமாகவும் தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில் அருள்மிகு உஷா தேவி சாயாதேவி அம்பிகை சமேத சிவ சூரிய பெருமான் திருக்கோயிலில் கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு மகா அபிஷேக ஆராதனை நடந்தது.

கோயிலில் உள்ள மகா அபிஷேக மண்டபத்தில் உற்சவர்கள் எழுந்தருள பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மகாயாகத்துடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் மகாதீப ஆராதனையும் நடந்தது.

இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்

What do you think?

நாகை அருகே பணம் இரட்டிப்பு தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு

கீழக்கரையில் மது மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு