வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை… ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவருக்கு வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர்.
அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளிய ஸ்ரீ கால பைரவருக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சீகைக்காய், பால், பழம், தேன், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.
பின்னர் வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலை அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர்.