மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை
சிவகங்கை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் குண்டு ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றன.
ஒவ்வொரு யுகத்திற்கு ஏற்றது போல் ஒரு தெய்வம் வந்து அருள் புரிவது நம் அறிந்த விஷயம் அப்படி கலியுகத்தை காக்க வேண்டும் என்பதற்காக எம்பெருமான் எடுத்த பல அவதாரங்களில் ஒன்றுதான் இந்த ஐயப்பன் அவதாரம் ஹரிஹரசுதன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஐயப்ப சுவாமி இக்கோவிலில் யோகாசன உருவமாக யோக பட்டையுடன் கையில் சின்முத்திரை காட்டி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் தமிழ் மாத ஒட்டி மூலவர் ஐயப்ப சுவாமிக்கு நெய் பால் தயிர் தேன் மஞ்சள் திருமஞ்சன பொடி பஞ்சாமிர்தம் விபூதி இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. நிறைவாக உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் நடத்தி மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.