in

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

 

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு சிவ கணேச கந்த பெருமாள் திருக்கோயிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

தேனி நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கும் உற்சவருக்கும் பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பலவித அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச கும்பத்திற்கு தீபாராதனை காட்டி தலையில் சுமந்து கொண்டு மேளம் நாதஸ்வரம் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி வந்து வராதி அம்மனுக்கு புனித கலச நீரால் அபிஷேகம் நடத்தினர்.

பின்னர் வராகி அம்மனுக்கும் உற்சவருக்கும் வண்ண பட்டுடுத்தி மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டினர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை பஞ்சமி தினத்தில் வராகி அம்மனை வணங்கி தரிசித்துச் சென்றனர்.

What do you think?

திருக்குறுங்குடி ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயர் தேவஸ்தான திருக்கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில் ஐந்து கருடசேவை

விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தல்