in

புரட்டாசி முதல் சனிக்கிழமை மெட்டாலா ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி மெட்டாலா ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இங்கு சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசத்தை சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

நாமக்கல் அருகே கோனூர் ராக்கியண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாமக்கல் அருகே பெரமாண்டம்பாளையம் கோவில்பாறை ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு