in

தேவூர் ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

தேவூர் ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

 

நாகை அருகே தேவூர் அருள்மிகு ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் பழமை வாய்ந்த அருள்மிகு தேவ துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் மஹா தீபாரதனை நடைபெறும் இன்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு மஹா யாகம் நடைப்பெற்றது அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ தேவதர்க்கை அம்மனுக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி பால் தயிர் பன்னீர் இளநீர் மற்றும் 16 வகையான திரவிய பொடிகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் தேவதுர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சிவஸ்ரீ விஜேந்திரன் சுவாமிகள் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட மற்றவர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

What do you think?

நடிகை சுகாசினி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்

வனதுர்க்கை அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை