in

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் தை மாத தேய்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் தை மாத தேய்பிறை பஞ்சமி திருநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவிலில் தை மாத தேய்பிறை பஞ்சமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன

இக்கோவிலில் ஸ்ரீ வாராஹி அம்மன் பிரம்மாண்டமான அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பஞ்சமி திருநாளில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர் முன்னதாக பிரம்மாண்ட அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கும் வாராகி அம்மனுக்கு முத்து மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ சிவலிங்க பெருமான் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் அம்மன் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து ஸ்ரீவராகி அம்மனுக்கு அன்னம் பழங்கள் இனிப்பு வகைகள் கிழங்கு வகைகள் வைத்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது

பின்னர் குங்குமம் கொண்டு அர்ச்சனைகள் செய்து கோடி தீபம் நான்கு முக தீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேங்காய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருட அபிஷேக விழா நடைபெற்றது

செஞ்சி சேத்பட் சாலையில் முனிஸ்வரன் கோயில் அருகில் போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பேரணி