in

சாமியார் பட்டி அருள்மிகு ஶ்ரீ வராகி அம்மன் திருக்கோவில் அம்மனுக்கு பஞ்சமி திருநாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

சாமியார் பட்டி அருள்மிகு ஶ்ரீ வராகி அம்மன் திருக்கோவில் அம்மனுக்கு பஞ்சமி திருநாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

 

சாமியார் பட்டி அருள்மிகு ஶ்ரீ வராகி அம்மன் திருக்கோவில் அம்மனுக்கு பஞ்சமி திருநாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவில் பஞ்சமி திருநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இக்கோவிலில் அமர்ந்த நிலையில் பிரமாண்டமாக ஸ்ரீ வராகி அம்மன் பக்தர்கள் அருள் பாலிக்கிறார் முன்னதாக விநாயகப் பெருமானுக்கும் வராகி அம்மனையும் எழுந்தருள செய்து திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றன.

தொடர்ந்து அம்மனுக்கு அரளிப்பூ மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

What do you think?

வசமா சிக்கிய சீமான்…சீமானு..க்கு ஆப்பு வைத்த விஜயலட்சுமி வழக்கு

தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடு