in

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

 

 

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ மூங்கில் அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா