அச்சரப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
அச்சரப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி சதுர்த்தசி திதியில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடராஜபெருமானுக்கு வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி புரட்டாசி சதுர்த்தசியன்று நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் சந்தனம், ஸ்வர்ணாபிஷேகம் கலசபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன அதன் பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
கோயில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க சங்கொலிநாதம் எழுப்ப மேள தாளங்கள் ஒலிக்க மகா தீபாரனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜபெருமானையும் சிவகாமசுந்தரியையும் வணங்கி சென்றனர்.