திருவாடானை பெரிய கோவிலில் 108 மூலிகை பொருட்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் உடன்மர் அருள்மிகு ஸ்ரீ ஆதி ரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வரலாற்றுச் சிற்பமிக்க ஆலயமாகும். இங்கு சிவபெருமானை சூரியன் பூஜித்தாக வரலாறும், அந்த நிகழ்வு இன்றளவும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூலவருக்கு இன்று அருகம்புல், விளாம்பழம், நாவல்பழம். மாதுளம் பழம், ஜாதிக்காய், கடுக்காய், கொப்பரைத் தேங்காய் உள்ளிட்ட 108 மூலிகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இந்த அபிஷேகத்திற்கு உள்ள மூலிகைப் பொருட்களை ஆழவாய் அன்பில் அற்ப்பணிப்பு மன்றம் கொண்டு வந்திருந்தனர்.
இன்று இந்த மூலப் பொருட்கள் அனைத்தும் கலசங்களில் வைத்து மாட வீதிகளில் பக்தர்கள் ஏந்தி வீதி உலா வந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த மூலிகை திரவிய பொருட்களால் மூலவரான ஆதிரெத்தினேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்று சென்றனர்.