குறிக்காறகருப்பண்ன சுவாமி ஆலயத்தில் மாசிமாத அம்மாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நாமக்கல் மோகனூர் குறிக்காறகருப்பண்ன சுவாமி ஆலயத்தில் மாசிமாத அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நாமக்கல் மாவட்டம் மோகனுார் சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு குறிக்காறகருப்பண்ண சுவாமி ஆலயத்தில் மாசிமாத அம்மாவாசையை முன்னிட்டு மூலவர், உற்சவர் குறிக்காறகருப்பண்ண சுவாமிக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் வீபூதி என வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அர்ச்சனை செய்த பின் கோபுர தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
உற்சவ குறிக்காற கருப்பண்ண சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறிய பல்லாக்கில் பக்தர்களுக்கு காட்சி தந்து திருக்கோவிலை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளாமானவர்கள் குறிக்காற கருப்பண்ண சுவாமியை வணங்கி சென்றனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.