கோடைகால மாணவர்களுக்கான கிரிகெட் விளையாட்டுக்கான சிறப்பு பயிற்சி
கடலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கோடைகால மாணவர்களுக்கான கிரிகெட் விளையாட்டுக்கான சிறப்பு பயிற்ச்சியில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த 120 மாணவர்கள் பங்கேற்ப்பு.
கடலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் கோடைகால
கிரிக்கெட் விளையாட்டுக்கான சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது.
கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் திரு ஜி பி வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்ப பயிற்சியில் மாவட்ட செயலாளர் இ கூத்தரசன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு மகேஷ் குமார் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் கடலூர் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சி
அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மே 1ந்தேதி முதல் 21ந்தேதி வரை இந்த கிரிகெட் பயிற்ச்சி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 14 வயது முதல் 19 வயது வரையிலான 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு மகேஷ் குமார் அவர்கள் பேட்டிங் பவுலிங் உட்பட பல்வேறு பயிற்சிகளும் கிரிக்கெட்டினுடைய நுணுக்கங்களையும் கூறினார்.
முன்னதாக மாணவர்கள் உடல் திறன் பயிற்சியும் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த நிகழ்ச்சியில் நன்கு தேர்ச்சி பெறும் மாணவர்களை இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு சிறந்த வழிகாட்டும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.
மாணவர்கள் படிப்பு திறமையுடன் அவர்களின் விருப்ப விளையாட்டுத் திறனையும் மேம்படுத்துவதற்காக தான் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகிறது.