ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஐப்பசி மாத சிறப்பு அலங்கார ஆராதனை
சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஐப்பசி மாத சிறப்பு அலங்கார ஆராதனைகள் பக்தர்கள் எலுமிச்சம் பழ விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சசிவர்ணேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஐப்பசி மாத முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு துன்பம் தீர்க்கும் அம்மனாக துர்க்கை அம்மன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார். முன்னதாக துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து எலுமிச்சை மாலை அரளி பூ மாலை மற்றும் மலர் மாலைகள் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோடி தீபம் நாகதீபம் கும்ப தீபம் மற்றும் ஏக முக தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் உதிரி புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டனர் அம்மன் சன்னதி முன்பு பக்தர்கள் அகல் விளக்கு தீபம் எலுமிச்சை பழ விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.