in

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு மாலை ஆரத்தி

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு மாலை ஆரத்தி

 

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு மாலை ஆரத்தி நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் மேலவாணியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை திருநாளை முன்னிட்டு மாலை அலங்கார ஆரத்திகள் நடைபெற்றன.

முன்னதாக சாய்பாபாவுக்கு வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்கரித்தனர்.

தொடர்ந்து பாபாவுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

பின்னர் ஒரு முகம் மூன்று முகம் மற்றும் ஐந்து முகம் கொண்ட தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதனைத் அடுத்து விநாயகப் பெருமானுக்கு தீப ஆராதனை காண்பித்து சாய்பாபாவுக்கு உப சேவைகள் செய்து நெய்வேத்தியம் நடந்தன.

நிறைவாக சாய்பாபாவுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபாவை வழிபட்டனர்.

What do you think?

விவாகரத்திற்கு இது தான் காரணம்….open…னாக பேசிய விஜய் யேசுதாஸ்

பெருமாள்பட்டி அருள்மிகு ஶ்ரீ பஞ்சாட்சர அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா