அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவ சிறப்பு கருடசேவை
அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தில் 5ம் திருநாள் சிறப்பு கருடசேவை புறப்பாடு. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் டவுண் மையபகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில். இத் திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகாியமாணிக்கப்பெருமாள் ( நீலமணிநாதா்) அருள்பாலிக்கின்றாா். ராஜராஜசோழ மன்னனுக்கு காிய மாணிக்கன் என்ற சிறப்பு பெயா் உண்டு. அவா் காலத்தில் கட்டப்பட்ட இத் திருத்தலம் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள், விழாக்கள் நடைபெறுகின்றன.
சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்பிரவாி 10ம்தேதி நடைபெற்றது. கும்்பாபிஷேகம் முடித்து வரும் முதல் பிரம்மோஸ்தவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா வில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு ஹோமமும் அபிஷேக ஆராதனைகளும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.5 ம் திருநாளான இன்று சிறப்பு கருட சேவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக காலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன.
தொடா்நது பெருமாளுக்கு சிறப்பு ஹோமமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இரவில் ஸ்ரீ நீலமணிநாதா். ஸ்ரீ கிருஷ்ணபகவான், மகிழ்வன்னநாதபுரம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் கருட வாகனத்திலும். ஸ்ரீ ராமபிரான் அனுமந்த வாகனத்திலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அன்னவாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.பின்னர் கருடவாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ நீலமணிநாத பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு குடவரைவாயில் தீபாராதனை நடைபெற்று திருவீதி உலா துவங்கியது.
சுவாமி சன்னதி தெரு வழியாக வந்து 5 சப்பரங்களும் தேரடியில் ஒருசேர அணிவகுத்து எழுந்தருள குடைகள் சாற்றி ஒருசேர அனைத்து சுவாமிகளுக்கும் மஹாதீபாரதனை நடைபெற்றது. இந்த சிறப்பு கருடசேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.