in

சீர்காழி சட்டநாதர் கோவிலில் ஆடி மாத சிறப்பு கோ பூஜை

சீர்காழி சட்டநாதர் கோவிலில் ஆடி மாத சிறப்பு கோ பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாரதனை நடந்தது.தொடர்ந்து கோ சாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை என்னும் பசுமாடு -கன்றுக்கு கோ பூஜை செய்து தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மாடு மற்றும் கன்றுக்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வணங்கினர்.

இதே போல் பிரம்மபுரீஸ்வரர் ஸ்வாமி சன்னதி பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேவாரப் பதிகங்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

What do you think?

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய திருக்குளத்தில் பொற்காசு எடுக்கும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.

மயிலாடுதுறையில் உட்கட்சி மோதல் காரணமாக திமுக பிரமுகர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூன்றாவது முறையாக கொலை மிரட்டல், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு