செஞ்சிக் கோட்டை சாதுல்லாக் கான் மசூதியில் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்ள சாதுல்லா கான் மசூதியில் பக்ரீத் பண்டிகை யை முன்னிட்டு முஸ்லீம்கள் இன்று காலையில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதை முன்னிட்டு செஞ்சி பெரிய பள்ளிவாசலில் இருந்து முஸ்லீம்கள் ஊர்வலமாக செஞ்சி கூட்ரோட்டிற்கு வருகை தந்தனர் அங்கு செஞ்சி தாலுக்கா பள்ளிவாசல் ஜா மாத்தலைவர் சையத் மஜித் பாபு பிறை கொடி ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஊர்வலமாக திருவண்ணாமலை சாலை வழியாக செஞ்சிக் கோட்டையில் உள்ள சாதுல்லா கான் மசூதியை அடைந்தனர்.
அங்கு காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை ஷமீம் அக்தர் நடத்தினார். இதில் பள்ளிவாசல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராமான இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
இதேபோல் செஞ்சி செட்டிபாளையம் கொத்தமங்களம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் தலைவர்கள், முன்னால் நகர செயலாளர் காஜா நஜீர், உள்ளிட்ட ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர் .
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை முடிந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில்
உலகம் எங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் பண்டிகை நல் வாழ்த்துக்களையும் இந்த பக்ரீத் பண்டிகையில்முஸ்லிம் பெருமக்கள் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதுதான் என்பது மாண்பு என அவர் தெரிவித்தார்.
இதே போல் அவலூர்பேட்டை, எதப்பட்டு ,வளத்தி, கடலி, சொரத்தூர், மீனம்பூர், அப்பம்பட்டு அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடந்தபக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் குழந்தைகள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவிபக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.