in

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு இரவு ஆரத்தி

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு இரவு ஆரத்தி நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் மேலவாணியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை திருநாளை முன்னிட்டு இரவு அலங்கார ஆரத்திகள் நடைபெற்றன முன்னதாக சாய்பாபாவுக்கு வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்கரித்தனர் தொடர்ந்து பாபாவுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன பின்னர் ஒரு முகம் மூன்று முகம் மற்றும் ஐந்து முகம் கொண்ட தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன இதனைத் அடுத்து விநாயகப் பெருமானுக்கு தீப ஆராதனை காண்பித்து சாய்பாபாவுக்கு உப சேவைகள் செய்து நெய்வேத்தியம் நடந்தன நிறைவாக சாய்பாபாவுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபாவை வழிபட்டனர்.

What do you think?

மயிலாடுதுறையில் வன்னியர் சங்கம் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

கீழே இறங்க முடியாமல் தவித்தவரை கயிறு கட்டி இறக்கிய தீயணைப்புத் துறையினர்