சிதம்பரத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
சிதம்பரத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிதம்பரத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
சிதம்பரத்தை அடுத்த வண்டிகேட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டனர். சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.
பல்வேறு ஜமாத் கூட்டமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் இதில் பங்கேற்று தொழுகை நடத்தினார். பின்னர் தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.