in

நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தேஸ்வரர் கோவிலில் சிறப்பு சங்காபிஷேகம்

நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தேஸ்வரர் கோவிலில் சிறப்பு சங்காபிஷேகம்

 

கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தேஸ்வரர் கோவிலில் சிறப்பு சங்காபிஷேகம் மற்றும் மகாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை இரண்டாம் சோவாரத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மகா யாகம் நடத்தப்பட்டு ஸ்வாமி அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சங்குகள் மற்றும் மகா கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

நாமக்கல் சக்கரைபட்டி சித்தர் ஆலயத்தில் 12 – ஆம் ஆண்டு குரு பூஜை விழா

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட்