in

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில் “மதுரையில் அம்ரூத் குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது, அதிமுக ஆட்சி காலத்தில் புயல் வேகத்தில் நடைபெற்ற பணிகள் தற்போது மிக தொய்வாக நடைபெறுகிறது, 2021 ஆம் ஆண்டு முடிவுற வேண்டிய குடிநீர் திட்டம் தற்போது வரை நிறைவு பெறவில்லை, குடிநீர், சாலை, பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்து உள்ளார்

மேலும் மழைநீர் வடிகால் வாய்காலை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம், தமிழ்நாடு ஒரு ஜனநாயக நாடு, இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அதை யாரும் மறுக்க முடியாது, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை, திமுக அரசு அராஜக போக்கோடு கண்மூடித்தனமாக செயல்படுகிறது, இ.பி.எஸ் முதலமைச்சராக இருந்த போது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றார், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா Jolly Trip சென்றது போல சைக்கிள், பைக், கார் ஓட்டி சுற்றி வருகிறார், மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும், மதுரை மாநகராட்சி மீது தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்கிறது” என கூறினார்

What do you think?

Goat படத்திற்கு boat யில் ப்ரோமோஷன் செய்து அசத்திய கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள்

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி நூதன முறையில் ஜி.பே-வில் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.