ஜூப்ளி திருச்சிலுவை தூய சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு ஆராதனை
காரைக்காலில் ஜூப்ளி திருச்சிலுவை தூய சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு வீதியுலவாக புனித தேற்றரவு அன்னை ஆலய வந்தடைந்தது.
ஜூப்ளி 2025 திருச்சிலுவையானது புதுவை கடலூர் உயர்மறை மாவட்டம் காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய பங்குத் தந்தையும் காரைக்கால் மறைமாவட்ட முதன்மை குருவுமான பால்ராஜ் குமார் அவர்களால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கிய ஜான் ராபர்ட் மற்றும் தூய தேற்றரவு அன்னை ஆலய இணைபங்கு தந்தை அருட்திரு சுவாமிநாதன் செல்வம் மற்றும் ஆன்மீக குருமார்கள் முன்னிலையில் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய நுழைவு வாயிலில் இருந்து புறப்பட்டு பக்தி பரவசத்துடன் சிலுவை பாதையின் 14 நிலைகளை நினைவுபடுத்தும் வகையில் 14 கார்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து மாண்புடன் கொண்டுவரப்பட்டு இறை மக்கள் திருப்பணியுடன் தூய தேற்றரவு அன்னை ஆலயம் வந்தடைந்தது.
தொடர்ந்து திருச்சிலுவைக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு அருட்சகோதரிகளால் வழிநடத்தப்பட்டது.