வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம்
சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலய
தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலய தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் தேன் ஆகிய பொருட்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தை காட்சியளித்த மூலவர்கள் ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் தயார் ஆகிய தெய்வங்களுக்கு ஏக தீப ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
மேலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஊஞ்சலில் காட்சியளித்த ஸ்ரீ பத்மாவதி தாயருக்கு ஏக தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தை மாத வைபவத்தை முன்னிட்டு நான்கு வெள்ளிக்கிழமையிலும் பத்மாவதி தாயருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற இருக்கிறது.