in

மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தேவையான சிகிச்சை அளிக்க தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு

மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வரும் அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே நோய் பாதிப்பிலிருந்து விடுபட முடியும் தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தகவல்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அதிக அளவில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் உடைந்த பாத்திரங்கள் தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பெயர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் அதை தவிர்த்து வைக்க வேண்டும்.

மழைக்காலங்கள் என்பதால் மாடிக்கு சென்று வாரம் ஒரு முறை தண்ணீர் தேங்காதவாறு சுத்தம் செய்து மருந்து தெளிக்க வேண்டும். இப்படி பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் கொசு முட்டை உற்பத்தியாகாமல் பார்த்துக் கொண்டாலே டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் எட்டாவது இடத்தில் உள்ளது.

இதில் தீவிரமாக கவனம் செலுத்தினாலே டெங்கு வராமல் பாதுகாக்க முடியும். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொறுத்தவரை தனிவாடு அமைக்கப்பட்டுள்ளது அதில் படுக்கைகள் கொசுவலைகள் தயார் நிலையில் உள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டாலோ 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் போகாமல் இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் பெரும் பாதிப்பிலிருந்து தவிர்க்க முடியும் தற்போது வரை மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த இரண்டு நபர்கள் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What do you think?

அரசு மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியப்படி செல்லும் மாணவர்கள்.