in

பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி மூன்றாம் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி மூன்றாம் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

 

மதுரை அழகர்மலை மீது உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி மூன்றாம் நாளை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்..மாலை அணிந்து சிறப்பு வழிபாடு…

மதுரை மாவட்டம் அழகர் மலை மீது உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மார்கழி மூன்றாம் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதனால் நாள்தோறும் அங்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் வழக்கமாக நடைபெறும். மேலும் மார்கழி மாதம் பக்தர்கள் மாலை அணியும் காலம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து மாலை அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் மார்கழி மாதத்தை முன்னிட்டு பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

What do you think?

புதுச்சேரி முதலமைச்சரை லடாக், நியோமா கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சந்திப்பு..