in

தஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத இரண்டாம் வார சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவியுடன் உரை
ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத இரண்டாம் வார சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் புலவர்நத்தம் ஊராட்சி உட்பட்ட அண்ணாநகருக்கும் தென்புறம் உள்ள 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தன் தோன்றிய பழமை வாய்ந்த ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரமும் சனிக்கிழமை தோறும் காலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் என்று நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் விநாயகர்,முருகன்,ஆஞ்சநேயர்க்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில் செல்லும் வழியில் கோயிலை சுற்றி பசுமை நிறைந்து காணப்படுகிறது கோயில் சிறப்பு பெருமாள் ஸ்ரீதேவியுடன் அமர்ந்தபடி ஸ்ரீ வள்ளவ பெருமாள் தரிசனம் தருகிறார்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்த காரியங்கள் நடைபெறுகிறது என்பதால் வாரம் தோறும் இப் பெருமாள் தரிசனம் செய்து வருகின்றனர்.

What do you think?

அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் புரட்டாசி சனிக்கிழமை இரண்டாம் வாரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

கும்பகோணம் அருகே காவிரிக்கரை ஓரங்களில் முதலமைச்சரின் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் தொடக்கம்