இந்து சமய அறநிலை துறை சார்பாக ராமேஸ்வரம் முதல் காசிக்கு ஆன்மீக சுற்றுலா
இந்து சமய அறநிலை துறை சார்பாக ராமேஸ்வரம் முதல் காசிக்கு ஆன்மீக சுற்றுலாவாக எட்டு நாள் பயணமாக அனுப்பப்பட்ட ஆன்மீக பக்தர்கள்.
திருவண்ணாமலை, இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ஆன்மீக புனித பயணமாக காசி யாத்திரைக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட 300 பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முற்றிலும் இலவசமாக ராமேஸ்வரம் முதல் காசிக்குச் சென்று மீண்டும் ராமேஸ்வரம் வரை பயணம் மேற்கொள்ளப்படுகிறது
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ஆன்மீக பயணத்திற்காக 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட ஆன்மீக பேருந்தை இந்து சமய அறநிலைய மண்டல இணை ஆணையர் சுதர்சன் இந்த புனித யாத்திரை இன்று அண்ணாமலையார் கோவிலின் முன்பாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த புனித யாத்திரை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த புனித யாத்திரைக்கு தகுதியானவர்கள் திருவண்ணாமலை மண்டலத்தில் 15 நபர்கள் இந்த புனித யாத்திரையில் பங்கு பெறுகிறார்கள்.
இந்த புனித யாத்திரையில் பங்கு பெறும் பயனாளிகள் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் வயது மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இந்த காசி யாத்திரை புனித பயணம் 8 நாட்களில் முடிவடையும் இந்த புனித பயணத்தில் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் ராமேஸ்வரத்திலிருந்து த்ரீ டயர் ஏசி கோச் புக் செய்யப்பட்டு பக்தர்களுக்காக இரண்டு கோச் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து பக்தர்கள் சென்று மீண்டும் இங்கு திரும்பும் வரை அனைத்து செலவுகளும் இந்து சமய அறநிலைத்துறை ஏற்கும் என தெரிவிக்கப்படுகிறது.