ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கருட சேவை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் கிராமம் ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.
முன்னதாக ஆலய வளாகத்தில் உள்ள யாகசாலையில் பல்வேறு வகையான திரவிய பொருட்கள் மற்றும் பத்து வஸ்திரங்கள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து பூர்ணாகஹூதி செலுத்தி கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் கருட வாகனத்தில் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து கருட வாகனத்தில் கிராம வீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான திரு தேரோட்டம் நாளை காலை ஏழு மணி அளவில் நடைபெறுகிறது.