ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காரைக்காலில் நகர பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை கோதண்ட ராமருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தின் அருகே வந்ததும் கருட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்டராமர் பெருமாள் திருக்கல்யாணம் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆலய தனி அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.